சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூவர் சாலையை சேர்ந்தவர் ஆனந்த். இவர் கேரளாவில் ஐ.பி.எஸ் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் காஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்காக பெண் வீட்டார் தரப்பில் இருந்து சுமார் 500 சவரன் நகை மற்றும் 4 கோடி ரூபாய் பணம் வரதட்சணை கொடுக்கபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆனந்த் கேரளாவில் ஐ.பி.எஸ் அலுவலராக பணியாற்றி வரும் போது வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி காஞ்சனாவை ஆனந்தும் அவரது தாய் மலர்கொடியும் சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியும், வன்கொடுமையும் செய்து வந்துள்ளனர். மேலும் காஞ்சானாவின் தந்தையின் சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்துள்ளனர்.