கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்துவருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூடியுள்ளனர்.
இதனால் போதைக்கு அடிமையான சிலர் மதுபானம் கிடைக்காததால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபானங்களைத் திருடிச் சென்றுள்ளனர். இதனால் டாஸ்மாக் கடையிலுள்ள மதுபாட்டில்கள் அரசு குடோன்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சிலர் விரக்தியில் சானிடைசர், வார்னிஷ் குடித்து உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
இந்நிலையில், வருத்தப்படாத வாக்காளர்கள் சங்கம் என்ற அமைப்பின் தலைவர் விஜயகுமார் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் அளித்துள்ள புகாரில், ”முகநூலில் ’எலைட் மதுபான கடை ஐடியில் ஆன்லைனில் புக் செய்தால் மதுபானங்கள் டோர் டெலிவரி செய்யப்படும்’ என அண்ணா நகர் சாந்தி காலனி முகவரி மற்றும் ’9983670439’ என்ற செல்பேசி எண்ணுடன் பதிவிடப்பட்டிருந்தது.