இதுதொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வீரமாணிக்கம் சிவா, ' முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து பிணையில் வெளி வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் அவரளித்த பேட்டி ஒன்றில், தான் சிறைக்குச் சென்று வந்ததை தேசத் தலைவர்களான வ.உ.சி மற்றும் காமராஜர் ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
' சிதம்பரத்தைக் கைது செய்க' - காமராஜரோடு தன்னை ஒப்பிட்டுப் பேசியதால் புகார்
சென்னை: வ.உ.சி மற்றும் காமராஜர் போன்ற தேசத் தலைவர்களை தன்னோடு ஒப்பிட்டுப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தைக் கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
p chithambaram
நாட்டு விடுதலைக்காக சிறைக்குச் சென்றவர்களை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஒப்பிட்டுப் பேசுவது கண்டனத்திற்குரியது. எனவே, தேசத் தலைவர்களின் பெயரைக் கெடுக்கும் வகையில் பேசிய ப. சிதம்பரத்தைக் கைது செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது ' எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'வீழ்வேனென்று நினைத்தாயோ, ஒரு நாளும் நாங்கள் வீழமாட்டோம்' - சிதம்பரம் சூளுரை