தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கமல்ஹாசனை கைதுசெய்ய காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் - kamal

சென்னை: குறிப்பிட்ட மதத்தைப் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் நடிகர் கமல்ஹாசன் பேசிவருவதால் அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் எனக் காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

kamal
kamal

By

Published : May 14, 2020, 4:38 PM IST

தேவராஜன் என்பவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், ”அண்மையில் சமூக வலைதளம் மூலமாக நடிகர் கமலிடம் சினிமா பயணம் குறித்து பல்வேறு கேள்விகளை நடிகர் விஜய் சேதுபதி முன்வைத்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, கமல்ஹாசன் தன்னுடைய திரைத் துறை அனுபவங்கள் குறித்து விளக்கினார். அதுமட்டுமில்லாமல் கர்நாடக இசையின் மும்மூர்த்திகளின் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் குறித்து பேசியுள்ளார்.

தியாகராஜ சுவாமிகள் குறித்து கமல் பேசிய கருத்துகள் கண்டிக்கத்தக்கது. தியாகராஜர், ராமரை புகழ்ந்து பிச்சை எடுத்தார் என அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார்.

குறிப்பாக, கர்நாடக இசையில் தியாகராஜ சுவாமிகளின் பங்களிப்பு அதிகமாக இருப்பது கமலுக்குத் தெரியும். தியாகராஜ சுவாமி, ராமர் குறித்த தெரிவித்த கருத்துகளுக்கு நடிகர் கமல் மன்னிப்புக் கேட்க கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை.

தொடர்ந்து குறிப்பிட்ட மதம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிவருவதால் கமல்ஹாசனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் முதலமைச்சரின் தனிப்பிரிவுகளிலும் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி இவர் புகாரளித்துள்ளார்.

இதையும் படிங்க:ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details