தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’டெல்லி தனிமைப்படுத்தல் முகாமில் தவிக்கும் தமிழர்கள்’

சென்னை: டெல்லி சுல்தான்புரி தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள தமிழ்நாட்டு தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

tamils
tamils

By

Published : Apr 24, 2020, 5:42 PM IST

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் சுல்தான்புரி என்ற இடத்தில் ‘தனிமைப்படுத்தி’ வைத்திருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர் முகாமில் உணவும், மருந்தும் கிடைக்காமல் கோவையைச் சேர்ந்த பொறியாளர் முஸ்தபா இறந்துள்ளதாக நெஞ்சு வெடிக்கும் துயரச் செய்தி வெளியாகியுள்ளது.

உயிரிழந்த முஸ்தபா இருந்த முகாமில் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற 500க்கும் மேற்பட்டோர் உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பலபேர் சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற காரணங்களுக்கு தொடர் சிகிச்சை பெற்று வருபவர்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு, உடனடியாக மத்திய மற்றும் டெல்லி மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு, சுல்தான்புரி முகாமில் உள்ள தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு பத்திரமாக வருவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 'அதிகார அத்துமீறல் நடத்தும் அமைச்சர் வேலுமணியின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்' - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details