தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

communist-party-of-india
communist-party-of-india

By

Published : Oct 12, 2020, 3:07 PM IST

Updated : Oct 12, 2020, 3:12 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டம் , தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசு நடவடிக்கைகளை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (அக்.12) மாநிலம் தழுவிய போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவள்ளூர், வேலூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராகவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் மத்திய அரசு செயல்படுவாதகக் குற்றஞ்சாட்டி கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

இந்தப் போராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள், அந்தந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க:உயர் பொறுப்பிலிருக்கும் சிலர் என்னை ஓரம் கட்டுகிறார்கள் - குஷ்பூ புகார்

Last Updated : Oct 12, 2020, 3:12 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details