தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கூடுதல் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரி கம்யூனிஸ்ட் புகார்! - Additional DGP

சென்னை: சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வரும் கூடுதல் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Communist complaint demanding action against additional DGP
Communist complaint demanding action against additional DGP

By

Published : Sep 16, 2020, 1:46 AM IST

டெல்லியில் பணியாற்றி வரும் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனை சார்ந்த கட்சிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றார்.

குறிப்பாக மார்க்சிஸ்ட் மற்றும் இஸ்லாமிய கட்சிகளுக்கு எதிரான கருத்துகளை தனது டிவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.

அரசு பணியில் உள்ள ஐபிஎஸ் அலுவலர் ஒருவர் ஒரு கட்சியைச் சார்ந்து பதிவிடும் கருத்துகள் அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கக்கூடாது.

இவரது செயல்பாடுகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், உடனடியாக கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்ககோரி இந்திய கம்ப்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details