தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல்: விசாரிக்க குழு அமைப்பு

By

Published : Jan 23, 2021, 5:05 PM IST

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு நேர்மையான முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து விசாரிக்க குழு அமைப்பு - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து விசாரிக்க குழு அமைப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ராகுல் காந்தி சுற்றுப்பயணம் தொடர்பான கேள்விக்கு, எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்தாகவும், இனி காங்கிரஸ் ஆட்சிக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என்று குறிப்பிட்டார்.

மேலும், ஸ்டாலினால் தமிழ்நாட்டிற்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி வெவ்வேறு வகையில் பரப்புரை செய்தாலும் தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் ஆட்சி புறக்கணிக்கப்பட்டுவிட்டது, அதிமுக அரசு தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள் என்றும், தேர்தல் நேரத்தில் திமுக கருப்பு பணம் செலவழித்தாலும், மக்கள் ஆதரவு அதிமுகவிற்குதான் என்று உறுதிப்பட கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 4 மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், மீனவர்கள் பிரச்னை தொடர்பாக பேச திமுகவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும், தமிழ்நாடு மீனவர்களுக்கு பச்சை துரோகம் செய்தது திமுக தான் எனவும் குற்றம்சாட்டினார். மீனவர்களின் வாழ்வதாரத்தை பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

அதுமட்டுமின்றி, மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்து மீனவர்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வரை ஓயமாட்டோம் என்றும், தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக இலங்கையில் குழு அமைத்துள்ளதாக கூறிய அவர், இந்த குழு நேர்மையான முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கனிமொழியிடம் கதறி அழுத கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர்!

ABOUT THE AUTHOR

...view details