தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூய்மைக்கான மதிப்பீடு – 2021: தரவரிசை கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்க ஆணையர் வேண்டுகோள்! - சென்னை அண்மை செய்திகள்

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் தூய்மைக்கான மதிப்பீடு - 2021 தரவரிசை கணக்கெடுப்பில் பொதுமக்கள் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவு செய்யுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Swachh Survekshan 2021
Swachh Survekshan 2021

By

Published : Jan 12, 2021, 6:07 PM IST

சென்னை: மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் தூய்மைக்கான மதிப்பீடு – 2021 தரவரிசை கணக்கெடுப்பில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"இந்தியா முழுவதிலும் உள்ள நகர உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் தேசிய அளவில் தூய்மை நகர கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இக்கணக்கெடுப்பில் பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்ந்து பங்கு பெற்று வருகிறது. 2019ஆம் ஆண்டு தூய்மைக்கான மதிப்பீடு கணக்கெடுப்பில் பெருநகர சென்னை மாநகராட்சி இந்திய அளவில் வேகமாக முன்னேறி வரும் நகரம் (Fastest mover city) என்ற விருதும், 2020 ஆண்டுக்கான கணக்கெடுப்பில் திடக்கழிவு மேலாண்மையில் புதுமை படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதலுக்கான (Innovation and Best Practices) விருதும் பெற்றுள்ளது.

இந்த வருடமும் நடைபெற உள்ள தூய்மை நகர கணக்கெடுப்பு பணி 2021 (Swach Survekshan 2021)இல் பெருநகர சென்னை மாநகராட்சியும் பங்கேற்க உள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்களின் கருத்துக்கு 1,400 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி 2021 ஜனவரி 4 ம் தேதி முதல் மார்ச் 31 ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிகழ்வில், சென்னை மாநகரின் தூய்மை குறித்து தங்களது கருத்துகளை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1969 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம். மேலும், www.swachhsurvekshan2021.org/citizenfeedback என்ற இணையதள முகவரி மற்றும் தூய்மைக்கான செயலியிலும் (Swachhata App) SS2021 VoteForYourCity என்ற செயலியிலும் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம்.

தூய்மைக்கான மதிப்பீடு 2021-ல் சென்னை மாநகராட்சி முன்னிலை வகிக்க பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details