தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அவசர கால பாஸ் பெறுவது குறித்து கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி - ஊரடங்கு உத்தரவில் அவசர கால பாஸ் பெறுவது எப்படி

சென்னை: ஊரடங்கு உத்தரவின் காரணமாக அவசர கால பாஸ் பெறுவது குறித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியுள்ளார்.

கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

By

Published : Mar 30, 2020, 8:46 PM IST

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், "ஊரடங்கு உத்தரவின் காரணமாக தற்போது அவசர தேவைக்காக வெளியூர் செல்பவர்களுக்கு மட்டுமே சிறப்பு பாஸ் வழங்கப்படுகிறது. திருமணம், இறப்பு காரியம், மருத்துவம் ஆகிய மூன்று காரணங்களுக்கு தான் பாஸ் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் அடையாள அட்டையும், திருமணம் என்றால் அதற்கான பத்திரிக்கையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அங்குள்ள காவல்துறையினரிடம் விசாரித்து, உண்மை தன்மையை வைத்தே பாஸ் வழங்கப்படும்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கும், சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஸ் வழங்கப்படுகிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கும், வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கும் ccwtnpolice@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விண்ணப்பத்தின் உண்மை தன்மையை விசாரித்த பின்னரே பாஸ் வழங்கப்படும்." என்று கூறினார்.

கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

மேலும் பேசிய அவர், "யாரும் தவறான தகவல்களை கொடுத்து பாஸ் வாங்க முயற்சி செய்ய வேண்டாம். மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் சிறப்பு பாஸ் உடன் வரும் வாகனங்களை நம்முடைய மாநிலத்தில் அனுமதிக்கிறோம். அதே போல நாம் வழங்கும் பாஸ் உடைய வாகனங்களையும் மற்ற மாநில காவல்துறையினர் ஏற்றுக் கொள்வார்கள். பாஸ் வாங்கி விட்டு ஒரு தேவைக்காக செல்பவர்கள் அதே பாஸ் மூலம் வந்து விடலாம். நேற்று மட்டும் கிட்டத்தட்ட 9000 ஈமெயில்கள் வந்துள்ளன." என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா: வாட்ஸ்அப் எடுத்த முடிவால் பயனாளர்கள் அதிருப்தி

ABOUT THE AUTHOR

...view details