சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலின் 17 வயது மகள் குனிசா அகர்வால். இவர், தனது தாயும் மருத்துவருமான வினிதா அகர்வால், வீட்டுப் பணிப்பெண்ணின் மகளுக்கு ஆன்லைன் வகுப்புக்காக, தான் பயன்படுத்திய லேப்டாப்பை கொடுத்து உதவியதைக் கண்டு, தானும் உதவ முன்வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் என்.ஜி.ஓ ஒன்றின் உதவியுடன், ஆன்லைன் வகுப்பிற்குத் தேவையான 100 உபகரணங்களை சேகரித்து, ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறார்.
சென்னை, ரோட்டரி க்ளப்புடன் இணைந்து, பாலசுப்பிரமணியம் என்ற தொழில்நுட்ப வல்லுநர் மூலம், www.helpchennai.org என்ற வெப்சைட்டை உருவாக்கி, ஆன்லைன் வகுப்புகளுக்கு லேப்டாப் மற்றும் போன் தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கும் வகையில், இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
மேலும், புதிய உபகரணங்கள் மட்டும் அல்லாமல், நண்பர்கள் ஏற்கனவே பயன்படுத்திய லேப்டாப், மொபைல் ஃபோன்களையும் மாணவர்களுக்கு கொடுத்து உதவி வருகிறார்.
ஏழை மாணவர்களுக்கு உதவும் காவல் ஆணையர் மகள் உபகரணங்கள் தேவையுள்ள மாணவர்கள், பெற்றோர், வருமான சான்று, பள்ளி அடையாள அட்டை, ஆதார் அட்டை வைத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவும் மனப்பான்மைக்கு தனது பெற்றோர் தான் முக்கியக் காரணம் எனக்கூறியுள்ள குனிஸா, தனது சகோதரி அர்ஷிதாவையும் இச்செயலில் ஈடுபடுத்தியுள்ளார். எளியவர்களின் நிலை அறிந்து உதவும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலின் மகள்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆன்லைன் வகுப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கி உதவும் காவல் ஆணையர் மகள் - குவியும் பாராட்டு இதையும் படிங்க: 'தாழங்குடாவில் ரூ.13.06 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புப் பணி, மீன் இறங்கு தளம்!'