சென்னை:இதுகுறித்து மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் தலைவரும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் காண தனித்துவமான மாநில கல்விக் கொள்கை உருவாக்கிட உரிய நடவடிக்கையில் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கு உயர்மட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.