தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்க அலுவலகத்தில் கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கம், மூட்டா உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்றனர்.
பதவி உயர்வு வழங்க அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பாளர் கிருஷ்ணராஜ், 'அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள், போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் பழைய இடத்திற்கே அரசு மாற்றம் செய்துள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இங்குள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். விரைவில் எங்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் ’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் ஆப்சென்ட்?