தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்வுத்தாளை அஞ்சலில் அனுப்ப நீண்ட நேரம் காத்திருந்த கல்லூரி மாணவ, மாணவியர் - Online exam paper

கல்லூரி மாணவ, மாணவியருக்கான இணையவழித் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கிய நிலையில் அதன் தேர்வுத்தாளை பதிவு அஞ்சலில் அனுப்புவதற்கு அஞ்சல் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தேர்வுத் தாளை பதிவுத் தபாலில் அனுப்ப நீண்ட நேரம் காத்திருக்கும் கல்லூரி மாணவ மாணவியர்
தேர்வுத் தாளை பதிவுத் தபாலில் அனுப்ப நீண்ட நேரம் காத்திருக்கும் கல்லூரி மாணவ மாணவியர்

By

Published : Jun 24, 2021, 6:40 AM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பொறியியல், கலை கல்லூரிகளுக்கான தேர்வுகள் தற்போது இணைய வழியில் நடைபெற்றுவருகிறது. மூன்று மணி நேரம் நடைபெறக்கூடிய இந்தத் தேர்வில், தங்களது விடைத்தாளை மாணவர்கள் பிடிஎஃப் வடிவில் கல்லூரி கொடுத்துள்ள சிறப்புச் செயலியில் அதனைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது விதிமுறை.

அதன்பிறகு அருகில் இருக்கக்கூடிய அஞ்சல் நிலையத்திற்குச் சென்று விடைத்தாள்களைப் பதிவு அஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும். இந்நிலையில் தேர்வுகள் முடிவடைகின்றன. நேரமும் அஞ்சல் நிலையங்களில் நேரத்திற்கும் குறுகிய கால அவகாசமே இருக்கின்ற காரணத்தால் மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் அஞ்சல் அலுவலகங்களில் குவியும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகமானோர் என்பதால் நீண்ட வரிசையில் காத்திருக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் இதுபோன்று நீண்ட வரிசையும் சமூக இடைவெளி அற்றத்தன்மையும் அபாயமான ஒன்றாகும். ஆகையால் உயர் கல்வித் துறை இதனைக் கருத்தில்கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்தால் நலம் என மாணவ மாணவியரும் பெற்றோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details