தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவன் அபிஷேக் (20). இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்துவந்தார்.
தாம்பரம் அருகே கல்லூரி மாணவன் வெட்டிக் கொலை! - தர்காஸ் பகுதியில் கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை
சென்னை: தாம்பரம் அடுத்த தர்காஸ் பகுதியில் கல்லூரி மாணவனை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது.
![தாம்பரம் அருகே கல்லூரி மாணவன் வெட்டிக் கொலை! தாம்பரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9376279-131-9376279-1604128351150.jpg)
தாம்பரம்
இந்த நிலையில், நேற்று திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு அதிகாலையில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது தாம்பரம் அடுத்த தர்காஸ் பகுதியில் திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அபிஷேக்கை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சோமங்கலம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Last Updated : Oct 31, 2020, 12:58 PM IST