தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காரை தறிக்கெட்டு ஓட்டிய மாணவன்: விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு! - காரை தறிக்கெட்டு ஓட்டிய மாணவன்

சென்னை: குரோம்பேட்டையில் கல்லூரி மாணவன் அதிவேகமாக ஓட்டி வந்த கார் மோதியதில் தலைமை காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

College student killed police

By

Published : Nov 10, 2019, 8:42 PM IST

சென்னை குரோம்பேட்டை துர்கா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). சேலையூர் காவல் நிலைய தலைமைக் காவலராக வேலை பார்த்து வந்தார். நேற்று நள்ளிரவு பணி முடித்துவிட்டு குரோம்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல தாம்பரம் கடப்பேரி ஜிஎஸ்டி சாலை பெட்ரொல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் குரோம்பேட்டையிலிருந்து பெருங்களத்தூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் மோதியதில், தூக்கி வீசப்பட்ட தலைமைக் காவலர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த குரோம்பேட்டை காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துத்தனர்.

'எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்' - தற்கொலைக்கு முயன்றவரைக் காப்பாற்றிய காவலர்!

அதன்பின்னர் விபத்தை ஏற்படுத்திய ஊரப்பாக்கம் காரணையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஆதித்யா(20) என்பவரைக் கைது செய்தனர். ரமேஷிற்கு இன்று பிறந்தநாள் எனத் தெரிகிறது. பிறந்த நாளிலே அவர் உயிரிழந்தது குடும்பத்தினர், காவல் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரை தறிக்கெட்டு ஓட்டிய மாணவன்: விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details