தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை - மாணவர் தற்கொலை

சென்னை மாநிலக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட மாணவர்
தற்கொலை செய்துகொண்ட மாணவர்

By

Published : Dec 29, 2021, 10:44 PM IST

சென்னை: பல ஆண்டுகளாக சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் பகுதியில் யார் ரூட்டு தல என்ற பிரச்சினை இருந்து வருகிறது. தற்போது மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

ஒருவரை ஒருவர் தாக்கிக் கொல்வது போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மாணவர்கள் ஈடுபடுவது உண்டு. இதன் தொடர்ச்சியயாக பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் நேற்றிரவு (டிச.28) அரக்கோணம் குரு ராஜபேட்டைபகுதியைச் சேர்ந்த குமார் என்ற சென்னை மாநிலக் கல்லூரி மாணவனை கேலி செய்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்துகொண்ட மாணவர்

இதன் காரணமாக சென்னை மாநிலக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் குமார், ஆடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:SI Audio: ஆளும் கட்சிப் பிரமுகர்கள் தொல்லை - தற்கொலை செய்யப்போவதாக ஆடியோ வெளியிட்ட எஸ்ஐ

ABOUT THE AUTHOR

...view details