சென்னை:தமிழ்நாடு அரசு பல்வேறு அரசு துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், ஆதிதிராவிடர் நலத்துறை இணை ஆணையர் பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர் செந்தாமரை, நில நிர்வாக துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பொதுப்பணித் துறை பிரிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அருணா விவசாயத் துறை இணை இயக்குனர், கூட்டுறவு துறை இணை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜதவத், விவசாயத் துறை இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.