தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை மாநகராட்சியின் சொத்து வரி ஊக்கத்தொகையை பெற இன்னும் ஐந்து நாட்களே உள்ளது!! - Collection of Property and Business Tax

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2022-2023 இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீத ஊக்கத்தொகையை பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சொத்து மற்றும் தொழில் வரி
சென்னை மாநகராட்சியின் சொத்து மற்றும் தொழில் வரி

By

Published : Oct 11, 2022, 9:03 PM IST

சென்னைமாநகராட்சியில் 2022 - 2023 ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரி 696.97 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும். முதல் அரையாண்டிற்கான சொத்துவரி செலுத்த வேண்டிய இறுதி நாளான செப்டம்பர் 30ஆம் தேதி மட்டும் 55.30 கோடி வசூலாகி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

13 லட்சம் சொத்து உரிமையாளர்களில் 4 லட்சம் பேர் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தியுள்ளனர் என்றும், உரிய நேரத்தில் சொத்து வரி செலுத்திய சொத்துரிமையாளர்களுக்கு இதுவரை 1.25 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை உரிய நேரத்தில் செலுத்தி ஐந்து சதவீத ஊக்கத்தொகை பெற இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் விரைந்து சொத்து வரியை செலுத்த மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. காலக்கெடு கடந்து சொத்துவரி செலுத்துவோருக்கு சொத்து வரியில் இருந்து கூடுதலாக விதிக்கப்படும் இரண்டு சதவீதம் தனி வட்டி விதிப்பில் சென்னை மாநகராட்சி விளக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்ற தனிக்குழு அமைக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details