தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

By

Published : May 10, 2021, 1:19 PM IST

Updated : May 10, 2021, 9:33 PM IST

13:16 May 10

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக அறிவிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வார காலம் கடந்தபோதிலும், அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்தது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே. பழனிசாமிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியதாகக் கூறப்பட்டது.

இச்சூழலில், எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 7ஆம் தேதி அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடியது. அப்போது ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தால் கூட்டமானது இன்றைக்கு (மே 10) கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Last Updated : May 10, 2021, 9:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details