நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை இன்று முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து அதிமுகவினருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதிமுகவினருக்கு முதலமைச்சர் வாழ்த்து - அதிமுக
சென்னை: வெற்றியை பெற மடைதிறந்த வெள்ளமாய் புறப்படுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
முதலமைச்சர்
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியதாவது,
வாகைக்கனி கொய்திட கழகத்தினர் செயல்பட வேண்டும், 40 தொகுதிகளிலும் வெற்றி என்பதற்கிணங்க ஆதரவு அதிகரித்துள்ளது. மடைதிறந்த வெள்ளமென அனைவரும் வெற்றியை பெற புறப்பட வேண்டும் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.