பசும்பொன் முத்துராமலிங்கத்தின் 113 ஆவது ஜெயந்தி விழாவும், 58 ஆவது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் அவரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். .
பசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தி - முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்! - பசும்பொன் முத்துராமலிங்கம்
சென்னை: இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி, சுதந்திர வேட்கையை தமிழகத்தில் விதைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கம் என முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
respects
அதில்,“சாதிய பாகுபாடுகளை கடுமையாக எதிர்த்தவர். இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி, சுதந்திர வேட்கையை தமிழகத்தில் விதைத்த தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 ஆவது ஜெயந்தியில் அவரை வணங்கி போற்றுகிறேன் “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேவர் சிலைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை!