சென்னைவிமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ’மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்திருக்கிறது, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் , டீசல் விலை குறைப்பு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் குறித்து அறிவிப்பு வெளியிடாவிட்டால், கோட்டையை நோக்கி பாஜக முற்றுகைப் போராட்டம் நடத்தும்’ என எச்சரித்தார்.
’முதலமைச்சர் காலையில் மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி படத்துக்கு மரியாதை செலுத்துவதும் , மாலையில் அவரது இறப்புக்கு காரணமானவர்களை விடுவிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதும் வடிவேல் நடித்த காமெடி காட்சியில் வரும் “ காலையில் பேசியது வேற வாய், இப்போ பேசுவது வேற வாய்” என்பது போல் இருக்கிறது’ என விமர்சனம் செய்தார்.