சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று (ஜூன்.24) நடைபெற்று முடிந்தது. இதையடுத்து நேற்று மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொன்முடி, சேகர் பாபு உள்ளிட்டோர் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்றனர்.
தொடர்ந்து அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அங்குள்ள பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தார்.
இதையும் படிங்க:'போஸ்ட் கோவிட் கிளினிக்' - கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு புதிய திட்டம்