தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

23 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை தேவை - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் - fishermen issue

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

cm stalin writes letter to pm modi on fishermen issue
cm stalin writes letter to pm modi on fishermen issue

By

Published : Oct 16, 2021, 7:57 AM IST

சென்னை: மீனவர்களை விடுதலை செய்யக்கோரி நரேந்திர மோடிக்கு, மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 11ஆம் தேதியன்று நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், அக்டோபர் 13 அன்று, பாரம்பரிய மீன்பிடித் தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, காரைநகர் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்ட காலப் பிரச்சினையில் உடனடியாக இந்தியப் பிரதமர் தலையிட்டு, இப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்திட, உறுதியான வழிமுறைகளைக் காண வேண்டுமென்றும், ஸ்டாலின் தனது கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட, இலங்கை அலுவலர்களிடம் உறுதியாக, தீர்க்கமான முறையில் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றிட வெளியுறவு அமைச்சகத்திற்கு வலியுறுத்துமாறு நரேந்திர மோடியிடம் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இலங்கைக் கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், நரேந்திர மோடி, உரிய வழிமுறைகளைக் கையாண்டு, இதற்கு நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details