சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரப்புரை பட்டியல்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அந்தப் பட்டியல் தற்போது வெளியாகிறது.
CM Stalin Virtual Campaign Schedule for Urban Local Body Election
இந்நிலையில், முதலமைச்சரின் தேர்தல் பரப்புரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (பிப். 6) தொடங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் பிப்.17ஆம் தேதி நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி தேர்தல் பரப்புரை திமுக முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நாள் | மாவட்டம் |
பிப்ரவரி 6 | கோயம்புத்தூர் |
பிப்ரவரி 7 | சேலம் |
பிப்ரவரி 8 | கடலூர் |
பிப்ரவரி 9 | தூத்துக்குடி |
பிப்ரவரி 10 | ஈரோடு |
பிப்ரவரி 11 | கன்னியாகுமரி |
பிப்ரவரி 12 | திருப்பூர் |
பிப்ரவரி 13 | திண்டுக்கல் |
பிப்ரவரி 14 | மதுரை |
பிப்ரவரி 15 | தஞ்சாவூர் |
பிப்ரவரி 17 | திருநெல்வேலி |
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் ஸ்ரீ ராமானுஜர் சிலை இன்று திறப்பு!