தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யானைகள் காப்பகமாக அகத்தியர் மலை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என முதலமைச்சர் ட்வீட் - உலக யானைகள் தினம்

தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக அகத்தியர் மலை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இயற்கையின் சொத்துகளான யானைகளை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

CM Stalin tweet for Agasthiyar Hills Elephant Sanctuary announcement
CM Stalin tweet for Agasthiyar Hills Elephant Sanctuary announcement

By

Published : Aug 12, 2022, 5:25 PM IST

சென்னை: உலக யானைகள் தினம் இன்று (ஆக. 12) கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அகத்தியர் மலை வனப்பகுதி, பாதுகாக்கப்பட்ட யானைகள் காப்பமாகமாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,"தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். வன சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதில் யானைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை கம்பீரமான பாலூட்டிகள்.

இயற்கையின் சொத்துகள். நாம் எப்பாடுபட்டாவது அதனைப்பாதுகாக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார். உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, கேரளாவில் உள்ள பெரியார் தேசிய பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பங்கேற்றார்.

அப்போது, 1,197 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட அகத்தியர் மலையின் வனப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும், யானைகள் பாதுகாப்புக்காக அர்ப்பணிக்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க:திருநெல்வேலி அகத்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details