சென்னை:வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மாநகரையே புரட்டிப்போட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் அதிகளவில் தேங்கியுள்ளதால், 11 சுரங்கப்பாதைகள், ஏழு சாலைகளில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சில மணிநேரங்கள் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனால், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது, பலத்த காற்றில் சரிந்துவிழுந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றுவது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது என அரசுத் துறையினர் முழு வேகத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
நன்றி தெரிவித்து ட்விட்
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள நிவாரணத்தை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், மின் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் ஆகியோரின் சேவைக்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில்," தொடர் மழை - அளவுக்கதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர்துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன்.