தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல் - மண்டபம் முகாம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிரப் பொருளாதார நெருக்கடியினால் தமிழ்நாடு வந்து, மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

CM stalin
CM stalin

By

Published : Apr 15, 2022, 8:46 PM IST

சென்னை: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரப் பொருளாதார நெருக்கடியினால், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டை நோக்கி வரத் தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி, கைக்குழந்தை உள்பட 16 நபர்கள் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இதுவரை சுமார் 40 இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தமிழ்நாடு வந்துள்ளனர்.

அவ்வாறு தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்று, தமிழ்நாடு அரசு இலங்கைத் தமிழர்களுக்கு தற்காலிகப் புகலிடம் வழங்கியுள்ளது. முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு, உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

இந்த நிலையில், மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார். அவர்களது அத்தியாவசியத் தேவை மற்றும் நலன் குறித்தும் விசாரித்தார்.

இதையும் படிங்க: 'நீங்க வராதீங்க; நாங்க வர்றோம்' - நரிக்குறவ மக்களுக்கான நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details