சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப். 27) நடைபெற்ற சட்டபேரவைக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து, இரங்கல் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய முதல்வர், "தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர் விபத்தில் உயிரிழந்தவருக்கு தலா 5 லட்சம் ரூபாய், உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக தஞ்சைக்கு விரைந்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.