சென்னை:பெரியாரின் 144ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும், பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.
பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து