சென்னை:சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, திமுக ஆட்சியமைத்து இன்றோடு 100 நாள்கள் நிறைவடைகிறது. இந்நிலையில், திமுகவின் 100 நாள் ஆட்சியைப் பாராட்டி திமுகவின் கூட்டணிக்கட்சியின் தலைவர்கள் இன்று சட்டப்பேரவையில் பேசினர்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " எனக்கு அடுத்து வரும் நாள்கள் குறித்தே கவலையாக இருக்கிறது. திமுகவிற்காக வாக்களிக்காதவர்கள்கூட இப்போது, தேர்தல் நடந்தால் கண்டிப்பாக திமுகவுக்கு வாக்களிப்பார்கள்.