இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. "கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு, தொற்றால் பாதிப்பிற்குள்ளானவர்கள் இருக்கும் பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள், அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதியில்லை.
அபராதம்