தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கனமழையால் வீடு இடிந்து 9 பேர் மரணம்: ஸ்டாலின் இரங்கல் - கனமழை

வேலூர் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்ததையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Nov 19, 2021, 12:17 PM IST

சென்னை: கனமழையினால் வீடு இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்ததையடுத்து ஸ்டாலின் (CM Stalin) இரங்கல் தெரிவித்துள்ளார்.

பேரணாம்பட்டு பகுதியில் மசூதி தெருவில் கனமழையினால் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி நான்கு குழந்தைகள், ஐந்து பெண்கள் உள்பட ஒன்பது பேர் இறந்த செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்ததாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


ஸ்டாலின் இரங்கல்

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவம் பெற்றுவருபவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கிடையாது; ஆனால்...' - பாலச்சந்திரன்

ABOUT THE AUTHOR

...view details