சென்னை: கொளத்தூர் பகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார். அங்கு கரோனா தடுப்பூசிப் போடும் பணியையும், கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட கோவிட் மருத்துவ சிறப்பு அவசர ஊர்திகளையும் (Covid Special Ambulance) பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ. 4 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அளித்தது. அதையடுத்து, நிவாரண நிதியின் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாயை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்து வருகிறது.