சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் 18 தளங்களைக் கொண்ட புதிய அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 8.3 லட்ச சதுர அடி பரப்பளவில், 6 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரியும் வகையில் இந்த புதிய கட்டடம் அமைந்துள்ளது.
இது தமிழ்நாட்டில் அமைந்துள்ள அமேசானின் நான்காவது அலுவலகமாகும். பணியாளர்கள் சேர்க்கையை வளர்ப்பதற்கு, நவீன கட்டமைப்பு வசதியுடன் சுறுசுறுப்பான சூழலை வழங்கும் வகையில், இந்த புதிய அலுவலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் சென்னை, கோயம்புத்தூரில் 14 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது.
அமேசான் அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் அமேசான் நிறுவனம், சென்னையில் முதன்முதலில் 2005ஆம் ஆண்டில் சுமார் 50 நபர்களுடன் செயல்படத் தொடங்கியது. தற்போது, மாநிலத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், தமிழ்நாட்டில் அமேசான் மக்கள் மற்றும் வணிக உத்திகளின் குறிப்பிடத்தக்க இடமாக உருவெடுத்துள்ளது. முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நான்கு நாள்கள் சுற்றுப்பயணம் சென்று திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
அமேசான் அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் இதையும் படிங்க: '6 மணி நேரம் இங்குதான் இருப்பேன், முடிந்தால் கைது செய்யுங்கள்'- அண்ணாமலை சவால்