சென்னை: கடந்த 12 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடற்சோர்வு ஏற்பட்டதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து தனது வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனைத்தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.