தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏடிஎம் கொள்ளை - உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - person who died in ATM robbery

ஏடிஎம் கொள்ளை முயற்சியைத் தடுக்கும் போது, கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழரசன் என்பவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டாலின் ஐந்து லட்சம் நிவாரணம்
ஸ்டாலின் ஐந்து லட்சம் நிவாரணம்

By

Published : Jul 9, 2021, 11:09 AM IST

சென்னை:திருவாரூர் மாவட்டம் கீழகூத்தங்குடி, கூடூரில் வசித்து வந்த தமிழரசன் சமீபத்தில், கூடூர் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை முயற்சியைத் தடுக்கச் சென்றதில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் செய்தியை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த தமிழரசன் குடும்பத்திற்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீட் பாதிப்பு ஆய்வுக் குழு - வரம்பை மீறிய செயல்

ABOUT THE AUTHOR

...view details