தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் தாயார் கருப்பாயி அம்மாள் இயற்கை எய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
அமைச்சர் பெரியகருப்பனின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் - Cm Stalin condoles the demise of minister Periyakaruppans mother
அமைச்சர் பெரியகருப்பனின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின்
பெற்றெடுத்த அன்னையின் இழப்பு என்பது எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அத்தகைய அன்னையை இழந்து வாடும் அமைச்சர் பெரியகருப்பன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என அதில் கூறியுள்ளார்.