சென்னை: தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. கரோனா பரவல் காரணமாகத் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை: காணொலியில் மேற்கொள்ளும் ஸ்டாலின் - கரோனா கட்டுப்பாடுகள்
கரோனா கட்டுப்பாடுகளை கருத்திற்கொண்டு, வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக மேற்கொள்ளவிருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலமாக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிதிநிலை அறிக்கை மக்களிடையே நம்பிக்கையினை உருவாக்கும் - ஓபிஎஸ்