தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடியிருப்பு விபத்து: ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின் - முதலமைச்சர் ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பு

சென்னை திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில், பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள், ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tamil Nadu Slum Clearance Board Building Collapse
Tamil Nadu Slum Clearance Board Building Collapse

By

Published : Dec 27, 2021, 1:36 PM IST

சென்னை:சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இன்று (டிசம்பர் 27) இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் (அப்போது குடிசை மாற்று வாரியம்) 1993இல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. அந்தக் கட்டடத்திலிருந்த 24 வீடுகள் முழுவதுமாகச் சேதமடைந்தன.

24 குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம்

அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசனை நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பிவைத்து, விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க 24 குடும்பங்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற, விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விவரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details