சென்னை: மு.க. ஸ்டாலின் தலைமையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், 2012இன் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று (நவம்பர் 27) நடைபெற்றது.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வுசெய்யப்பட்டது.
போக்சோ சட்டம் குறித்து ஆய்வு
போக்சோ சட்டம் செயல்பாடு குறித்து தமிழ்நாடு, தேசிய அளவிலான பல்வேறு புள்ளி விவரங்கள், போக்சோ சட்டத்தின்கீழ் புகார்களைப் பதிவுசெய்வது மிகவும் எளிமையாக்குதல், இச்சட்டத்தில் பல்வேறுவிதமான பாலியல் குற்றச்செயல்கள் வரையறுக்கப்பட்டபடி அனைத்துக் குற்றங்களையும் சம நோக்குடன் தீவிரமாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுதல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆய்வுசெய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், மு.க. ஸ்டாலின் அலுவலர்களுக்கு சில உத்தரவுகளை வழங்கினார். அவை கீழ்வருமாறு:
- ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசு தனியாக இழப்பீட்டு நிதியை உருவாக்கி இதுவரை 148 குழந்தைகளுக்கு ஒரு கோடியே 99 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை முதற்கட்டமாக வழங்கியுள்ளது. அடுத்தக்கட்டமாக, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இழப்பீடுகள் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆய்வகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்
தடயவியல் ஆய்வு அறிக்கைகள் விரைந்து கிடைக்க ஏதுவாக அதற்கான தடயவியல் ஆய்வகங்களின் எண்ணிக்கை, இதர உள்கட்டமைப்புகள் கூடுதலாக அமைக்க வேண்டும்.
- 1098 - சிறார் உதவி எண்