தமிழ்நாடு

tamil nadu

மதுரையில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு...  ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு...

By

Published : Jun 4, 2022, 9:24 AM IST

மதுரை மாவட்டத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியின் போது மண்சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

குடிநீர் குழாய் அமைக்கும் போது மண்சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் நிதியுதவி - ஸ்டாலின் அறிவிப்பு
குடிநீர் குழாய் அமைக்கும் போது மண்சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் நிதியுதவி - ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரை மாவட்டம் விளாங்குடி கிராமம் ராமமூர்த்தி நகர் மெயின் வீதியில், மாநகராட்சி சார்பில் நடைபெற்று வந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மண்சரிவினால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீரணன் என்ற சதீஷ் (34) என்பவர் உயிரிழந்தார்.

இந்த தகவலை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவரின் மனைவி தேவி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த சதீஷ் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐந்து லட்சம் நிதியுதவி வழங்க உத்திரவிட்டுள்ளேன். அதோடு தமிழ்நாடு அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய நிதியத்திலிருந்தும் ரூபாய் ஐந்து லட்சம் வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கை ரிக்‌ஷாவை ஒழித்தவர் கருணாநிதி - ’வேருக்கு விழா’ நிகழ்வில் முதலமைச்சர் உரை!

For All Latest Updates

TAGGED:

cm stalin

ABOUT THE AUTHOR

...view details