சென்னை:கப்பலோட்டிய தமிழன் , செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படுகின்ற வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் நிலையில், சென்னை ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மலர் மாலை இடப்பட்டு , சிலையின் பீடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று(செப். 5) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வ.உ.சிதம்பரனார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர், சிதம்பரனாரின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்றிருந்த செய்தி மக்கள் தொடர்புத் துறையின் துண்டறிக்கையை அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார்.
வ.உ.சி உருவப்படத்திற்கு மரியாதை செய்த முதலமைச்சர் - மலர் தூவி மரியாதை
விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
வ.உ.சி உருவப்படத்திற்கு மரியாதை செய்த முதலமைச்சர்
அமைச்சர்கள் சேகர்பாபு, கே .என் நேரு, மா.சுப்பிரமணியன் , இராஜ கண்ணப்பன் , செந்தில் பாலாஜி , வெள்ளக்கோயில் சாமிநாதன் , பொன்முடி மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதிமாறன் , சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி உள்ளிட்டோர் முதலமைச்சருடன் வருகை தந்து வ.உ.சி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க:அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா!