தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக் சேவை' - நாளை தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை 2000 மினி கிளினிக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

CM Palaniswami will start 2000 mini clinics in Tamil Nadu tomorrow
CM Palaniswami will start 2000 mini clinics in Tamil Nadu tomorrow

By

Published : Dec 13, 2020, 3:43 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தற்பொழுது தொடர்ந்து குறைந்துவருகிறது. இந்த நிலையில் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை தடுப்பதற்கும் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


காய்ச்சல், தலைவலி போன்ற எளிதாக சிகிச்சை அளிக்கும் நோய்களை குணப்படுத்த, தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் (மினி கிளினிக்) சிகிச்சை மையங்களை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மினி கிளினிக்குகளில் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகளுடன் மருத்துவர், செவிலி, உதவியாளர் என 3 பேர் இடம் பெறுவர்.


சென்னை மாநகராட்சியில் 200 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ள 2000 மினி கிளினிக் முன்னேற்பாட்டு பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details