உயர் கல்வித் துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏழு கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார், நிர்வாகக் கட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அரசு தொழில் நுட்பக் கல்லூரிகள், அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 82 கோடியே 94 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் திறந்து வைத்து, சென்னை பிர்லா கோளரங்கத்தில் ரூ. 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மின்னணு கருவி, கோளத்தில் அறிவியல் கருவி ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.