மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சந்தித்துப் பேசி வருகின்றனர். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடனிருந்தனர்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை; அமித் ஷா - முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
அமித் ஷா
22:10 February 28
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று(பிப்.28) காலை அமித்ஷா உடன் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது அதிமுக முக்கியஸ்தர்களுடன் அமித்ஷா ஆலோசனை செய்துவருகிறார். இந்தச் சந்திப்பில் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பாஜகவுடன் கைகோர்க்கப் போகிறார் மம்தா; சீதாராம் யெச்சூரி எச்சரிக்கை
Last Updated : Feb 28, 2021, 10:53 PM IST