சென்னை: தமிழ்நாடு வனத்துறையில் 2018-19ஆம் ஆண்டிற்கான 313 வனக்காப்பாளர்கள் மற்றும் 62 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள் பணியிடங்களுக்குத் தமிழ்நாடு வனச்சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
வனத்துறையில் 300க்கும் மேற்பட்டோருக்குப் பணி ஆணை வழங்கிய முதலமைச்சர்! - cm job order
தமிழ்நாடு வனத்துறையில் 2018-19ஆம் ஆண்டிற்கான 313 வனக்காப்பாளர்கள் மற்றும் 62 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள் பணி நியமனத்திற்கான ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
![வனத்துறையில் 300க்கும் மேற்பட்டோருக்குப் பணி ஆணை வழங்கிய முதலமைச்சர்! cm order issue in forest dept jobs](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10628079-thumbnail-3x2-cm-order.jpg)
cm order issue in forest dept jobs
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி . சீனிவாசன், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் முனைவர் சந்தீப் சக்சேனா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.