சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள அவசரக்கால சிகிச்சை மையங்களைத் தொடங்கி வைத்தார்.
2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் அவசர கால சிகிச்சை மையங்கள்!
2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கிருஷ்ணகிரியின் சூளகிரி, திருப்பத்தூரின் மாதனூர், திருவள்ளூரின் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களிலுள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள அவசர கால சிகிச்சை மையங்களைக் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
மேலும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் 62 கோடியே 97 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மருத்துவக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம் - மகுடஞ்சாவடி , மதுரை மாவட்டம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் , கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டம் - மாதனூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் - கும்மிடிப்பூண்டி 5 இடங்களில் சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள அவசரகால சிகிச்சை மையங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.