தலைமைச் செயலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம், தருமபுரி, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 10 பகல் நேர பராமரிப்பு மையங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், 10 கோடி ரூபாய் செலவில் பிறருடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில், தக்க செயலிகளுடன் கூடிய 10,000 திறன்பேசிகளை (Smart phones with Apps) பார்வையற்ற மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.